அமெரிக்காவில் விசா சிக்கல்!  லட்சக்கணக்கான இந்தியர்கள் திரும்புகிறார்கள்! 

அமெரிக்காவில் விசா சிக்கல்!  லட்சக்கணக்கான இந்தியர்கள் திரும்புகிறார்கள்! 

இந்தியாவில் இன்றும் அடிப்படை வசதிகள் எதுவுமே சென்றடையாத கிராமங்கள் இருக்கின்றன. செல்போன் பார்த்திராத மக்கள் எல்லாம் இன்றும் இந்தியாவின் கடைக்கோடிகளில் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், படித்து முடிப்பதற்கு முன்பே அமெரிக்காவிற்கு பறந்து செல்லத் துடிப்பவர்களும் இன்றும் மணி கணக்கில் கால்கடுக்க தூதரகங்களின் வாசலில் தவமிருக்கிறார்கள். ஐந்தாவது படிக்கும் போதே, ‘என் மகனை எப்படியாச்சு அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சுடனும்’ என்று ஏங்கிக் கிடக்கும் பெற்றோர்களாக தான் பலரும் இருக்கிறார்கள். 

கைநிறைய டாலர்களில் சம்பளம், தலைமுறை,  தலைமுறையாக பார்த்திராத செல்வ சூழல், நவீன வசதிகள், சுகாதாரமான வாழ்க்கை, நுனி நாக்கு ஆங்கிலம் என்று அமெரிக்க மோகத்தில் அதிகளவில் இந்தியர்கள் அமெரிக்காவை நோக்கி படையெடுத்து வருவதால், அமெரிக்காவில் சில கெடுபிடிகளை தொடர்ந்து செய்து வருகிறது அந்நாட்டு அரசு. இந்நிலையில், அமெரிக்காவில் எச்-4 விசாவில் குடும்பத்தினருடன் தங்கியிருக்கும் மாணவர்கள் 21 வயதைத் தொட்டதும், அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை கொடுத்திருக்கிறது. 

h4 visa

அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரிபவர்களின் குடும்பத்தினர், எச்-4 விசா பெற்று அவர்களுடன் தங்கியிருக்கின்றனர். 21 வயதுக்குப் பிறகு எச்-4 விசாவில் அவர்களால் தங்க முடியாது. தொடர்ந்து அமெரிக்காவிலேயே இருக்க வேண்டுமானால் கிரீன்கார்டு பெற வேண்டும். ஆனால் கிரீன்கார்டு வழங்குவதற்கு ஒவ்வொரு நாடு வாரியாக அமெரிக்க அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. கிரீன்கார்டு தருவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் என்ற உச்சவரம்பு உள்ளது. ஆனால் அமெரிக்காவிற்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், கிரீன்கார்டு பெற இந்தியர்கள் விண்ணப்பித்து 10 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன்கார்டு நிலுவையில் 7.32 லட்சம் இந்தியர்கள் கிரீன்கார்டுக்காக காத்திருக்கின்றனர் என்கிறது புள்ளி விவரங்கள்.  பெரும்பாலும் 21 வயதில் அவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டும் அல்லது சர்வதேச மாணவராக தங்கி பயில்வதற்கான எஃப்-1 விசா பெறவேண்டும். இந்த எஃப்-1 விசாவை பெறுவதற்கு நிறைய பணத்தை செலவிட வேண்டும். மேலும் அமெரிக்காவிலேயே நிரந்தரமாக குடிபெயர்ந்து விடும் நோக்கம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இதனால், அமெரிக்க வாழ்க்கை என்று லட்சக்கணக்கில் இந்தியாவில் இருந்து சென்றவர்கள், இப்போது, தங்கள் குடும்பங்களை அமெரிக்க மோகத்திற்காக பிரிந்து வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.