அமெரிக்காவில் நவீன மணிமேகலை அட்சயபாத்திரத்துடன்! என்னா மனுசனய்யா!

 

அமெரிக்காவில் நவீன மணிமேகலை அட்சயபாத்திரத்துடன்! என்னா மனுசனய்யா!

பழைய சோறை ஓட்டல்களில் 50ரூபாய்க்கு விற்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மீதமாகிவிட்டது, வேஸ்ட் என எதுவுமே இல்லை. எக்ஸ்ட்ரா சாப்பாடு கேட்டால் 20 ரூபாய் பில் + ஜி.எஸ்.டி என நீட்டுவார்களோ என பயந்துகொண்டே பாதி வயிறோடு எழுந்து வரவேண்டி இருக்கிறது. நன்றாக இருந்துட்டுப் போகட்டும்.

பழைய சோறை ஓட்டல்களில் 50ரூபாய்க்கு விற்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மீதமாகிவிட்டது, வேஸ்ட் என எதுவுமே இல்லை. எக்ஸ்ட்ரா சாப்பாடு கேட்டால் 20 ரூபாய் பில் + ஜி.எஸ்.டி என நீட்டுவார்களோ என பயந்துகொண்டே பாதி வயிறோடு எழுந்து வரவேண்டி இருக்கிறது. நன்றாக இருந்துட்டுப் போகட்டும். இவ்வளவுக்குப் பிறகும் நாட்டில் மழை பொழிகிறதென்றால், நல்லார் ஒருவராச்சும் இருக்கிறார் என்றுதானே பொருள். அப்படி நல்லார் ஒருவர் இருக்கிறார் அதுவும் அமெரிக்காவில்.

Kazi Mannan, owner Sakina Hotel

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகில் சிலபல கட்டங்களைத் தாண்டி, ஒரு ஒட்டல் இருக்கிறது. ஓட்டல் நடத்துபவர் பாகிஸ்தானைச் சேர்ந்த‌ காஸி மன்னன்! (மன்னன்?? ம்ம்ம், நம்மாளு மாதிரிதான் இருக்கு, கீழடி அகழ்வாராய்ச்சி எல்லாம் முடியட்டும், அப்புறம் பேசிக்குவோம்). மன்னனின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு பசிக்கிறது ஆனால் கையில் காசு இல்லை என்றாலும் பரவாயில்லை, வந்து சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்கிறார். ஓசியில் தருகிறோம் என்பதற்காக பின்வாசல் பக்கம் வந்து நில்லுங்கள், வீசுகிறோம், பொறுக்கிச் செல்லுங்கள் என்றெல்லாம் சொல்வதில்லை. காசு குடுத்து உண்ணும் மற்ற வாடிக்கையாளர்கள் எப்படி கவுரமாக வந்துசெல்கிறார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் நடத்துகிறார்.

Sakina Halal Grill

பாகிஸ்தானில் சிறுவனாக இருக்கும்போது பசியின் உக்கிரத்தை அனுபவத்திருக்கிறார் மன்னன். இப்போது அமெரிக்காவில் வசதியாக இருப்பதால், பசித்தோருக்கு உணவிடுவதை கடமையாக வைத்துள்ளார் மன்னன். மன்னா, நீ மாமன்னன். வறியவர்க்கு வாரி வழங்கும் நவீன மணிமேகலை.