அமெரிக்காவில் ’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’ – பிரீமியர் ஷோவால் களைகட்டும் கொண்டாட்டம்!

 

அமெரிக்காவில் ’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’ –  பிரீமியர் ஷோவால் களைகட்டும் கொண்டாட்டம்!

இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ttn

இந்நிலையில் வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா ‘தர்பார்’   பிரீமியர்  காட்சியை, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.  

ttn

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அமெரிக்காவில்  250 க்கும் மேற்பட்ட  தியேட்டர்களில்  வெளியாகவுள்ள இப்படம் கூடுதல் தியேட்டர்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ttn

ரஜினிகாந்தின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு சந்தையான அமெரிக்காவில்  தர்பார் வெளியாகவுள்ளதும், சூப்பர் ஸ்டாருடன் இயக்குநர் முருகதாஸ் இணைந்துப் பணியாற்றும் முதல் படம்  திரைப்படம் என்பதாலும் இப்படம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.