அமெரிக்காவில் கொரோனாவால் 22 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு – வெள்ளை மாளிகை கணிப்பு

 

அமெரிக்காவில் கொரோனாவால் 22 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு – வெள்ளை மாளிகை கணிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை கணித்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை கணித்துள்ளது.

அமெரிக்கா நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5112-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்து 3-வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நாட்டில் 1051-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

USA

இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் மொத்த பலி எண்ணிக்கையை வெள்ளை மாளிகை கணித்துள்ளது. அதன்படி சுமார் 1 லட்சம் பேர் முதல் 22 லட்சம் பேர் வரை கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 15-ஆம் தேதி அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 2,214 பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு அந்நாட்டில் இறப்புவீதம் குறைந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.