அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: மாமனாருடன் மருமகன் ஜாலி க்ளிக்

 

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: மாமனாருடன் மருமகன் ஜாலி க்ளிக்

அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

ஷங்கரின் ‘2.0’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

rajinikanth

அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மருமகனும் நடிகருமான தனுஷும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தனுஷின் தோள் மீது ரஜினி கைப்போட்டுக் கொண்டு சிரிக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

rajinikanth

புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் ரஜினி, பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் புரொமோஷனில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.