அமெரிக்காவில் இருந்து ஆட்டம் காட்டும் எடப்பாடி… அலறும் ஓ.பி.எஸ்..!

 

அமெரிக்காவில் இருந்து ஆட்டம் காட்டும் எடப்பாடி… அலறும் ஓ.பி.எஸ்..!

அதிகாரபூர்வமற்ற முறையில் அந்த இரு அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமியின் பிரதிநிதிகளாக இப்போது செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பொதுவாக முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது அவரது பணிகளை துணை முதல்வரே பார்த்து கொள்வது வழக்கம். இந்நிலையில், தமிழக முதல் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் சென்றுள்ள நிலையில், இந்த பணிகளை இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கி விட்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஐந்து நாட்கள் ஆகின்றன. ஏற்கனவே தனது முதல்வர் பதவிக்கான பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைப்பதில்லை என்ற முடிவோடுதான் எடப்பாடி விமானம் ஏறியிருக்கிறார்.edappadi

அதுபோலவே யாரிடமும் பொறுப்புகள் கொடுக்கப்படாத நிலையில், தமிழகத்தில் நடக்கும் அரசு ரீதியான, அரசியல் ரீதியான விவரங்களைத் தொடர்ந்து இரு அமைச்சர்களிடம் அலைபேசி செய்து விசாரித்து தெரிந்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இருவரையும் அவ்வப்போது போனில் பேசும் முதல்வர், துறை ரீதியான விவரங்களையும், தமிழகத்தின் அன்றாட நடப்புகளையும் கேட்டு கொள்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் இருக்கும் நாட்களிலேயே ரோஜா இல்லத்தில் அமைச்சர் வேலுமணியைத் தேடி பல எம்.எல்.ஏ.க்கள் வந்து அரசுரீதியான, கட்சிரீதியான கோரிக்கைகளை கொடுப்பதும் வாடிக்கையான ஒன்று தான்.

வெளிநாட்டுக்குப் புறப்படும் முன்பே அமைச்சர் வேலுமணிக்கென சில பொறுப்புகளும் அமைச்சர் தங்கமணிக்கென சில பொறுப்புகளும் பகிர்ந்து கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன்படியே இருவரிடமும் அவ்வப்போது விசாரித்து நிலைமைகளைத் தெரிந்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக, முதல்வர் பொறுப்புகள் இன்னாருக்கு அறிவிக்க வேண்டி வந்தால், தானாக துணை முதல்வர் பன்னீருக்குத்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால்தான் அதிகாரபூர்வமாக பொறுப்புகளை அறிவிக்காமல், அதிகாரபூர்வமற்ற முறையில் அந்த இரு அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமியின் பிரதிநிதிகளாக இப்போது செயல்பட்டு வருவதாக தெரிகிறது.sellur Raju

இது துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. கடந்த வாரம் தேனியில் சட்டக் கல்லூரி திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தோடு கலந்துகொண்டவர் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் மட்டும்தான். இதே நாளில் வேலுமணி மதுரையில்தான் முகாமிட்டிருந்தார். மழைநீர் சேகரிப்பு, குடிநீர் மராமத்து பணி ஆய்வுகளுக்காக மதுரையிலிருந்த வேலுமணி, அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோரோடு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். ஆனால், இந்த அமைச்சர்கள் யாருமே அருகில் இருக்கும் தேனி சட்டக் கல்லூரி திறப்பு விழாவுக்குச் செல்லவில்லை. அறிவிக்கப்பட்ட துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமாக இருந்தாலும் அறிவிக்கப்படாத துணை முதல்வர்களாக இருப்பது வேலுமணியும், தங்கமணி இருந்து வருகின்றனர்.