அமெரிக்காவிற்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்! அச்சத்தில் உறைந்த மக்கள்!! 

 

அமெரிக்காவிற்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்! அச்சத்தில் உறைந்த மக்கள்!! 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள்  வெட்டிக்கிளிகள் திடீரென நுழைந்ததால் குடியிருப்பாளர்களும், சுற்றுப்பயணிகளும்அதிர்ச்சியடைந்துள்ளனர். பருவநிலை மாற்றத்துக்கும் வெட்டுக்கிளிகளின் வரவுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஒவ்வொரு வெட்டுக்கிளியும் சுமார் 4 சென்டிமீட்டர் அளவுக்கு பெரிதாக இருப்பதாகவும், பகலிலேயே வீடுகளுக்குள் உலாவருவதாகவும், பார்ப்பதற்கு மிகவும் அருவெருப்பாக இருப்பதாகவும் லாஸ் வேகாஸ் மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

Just insane – @FOX5Vegas @8NewsNow @News3LV @KTNV @VitalVegas @themelissavegas @LasVegasLocally @VegasLifeBaby @VGKim75 @WinstonDaDoodle @BarkAndreFurry pic.twitter.com/WhjGEbbSPU

— 365 in Vegas (@365inVegas) July 26, 2019

 

வெளிச்சமான இடங்களை நோக்கி கூட்டங்கூட்டமாகப் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வெட்டுக்கிளிகளால் ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது. சிலர் வெட்டுக்கிளியை அடித்து கொல்கின்றனர். மேலும் சிலர் கரப்பான் பூச்சி ஹிட்டுகளை அடித்து, வெட்டுக்கிளியை அழித்துவருகின்றனர்.