அமெரிக்காவின் 50 மாகாணங்களில் கொரோனா வைரஸ்… ஏப்ரலுக்குள் மருந்து ரெடி… டிரம்ப் தகவல்

 

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் கொரோனா வைரஸ்… ஏப்ரலுக்குள் மருந்து ரெடி… டிரம்ப் தகவல்

அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் கொரோன வைரஸ் பரவியுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்துக்குள் கொரோன வைரசுக்கு மருந்து ரெடியாகி விடும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

சீனாவில் பல ஆயிரம் பேரை உயிர்பலி வாங்கிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்நாட்டில் உள்ள 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. மேலும் அந்நாட்டில் மட்டும் கொரோன வைரசுக்கு 100 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்க மக்கள் பீதியில் உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்

இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி, அதனை அழித்தே தீருவோம். கொரோனா வைரஸை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் சோதனையை துவங்கியுள்ளோம்.

அமெரிக்க மாகாண மேப்

மருந்து மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும். நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்களுக்கு 15 அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.