அமெரிக்காவின் முன்னாள் அதிபர் வாக்கர் புஷ் காலமானார்!

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் வாக்கர் புஷ் காலமானார்!

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 94. 

வாஷிங்டன்: அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 94. 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்  கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தார்.  முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுக்காலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் கடந்த பல மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவரான புஷ், சீனாவுக்கான தூதர் பொறுப்பேற்று அரசு நிர்வாகத்தில் நுழைந்தார். இவரது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் ,அமெரிக்காவின் 43-வது அதிபராக இருந்தவர். புஷ் மறைவுக்கு  அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.