அமெரிக்காவின் ஏரியா 51: வேற்றுக்கிரகவாசிகள் உலா வருகிறார்களா?

 

அமெரிக்காவின் ஏரியா 51: வேற்றுக்கிரகவாசிகள் உலா வருகிறார்களா?

அமெரிக்காவின் ரகசிய ஆயுதம் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள், விண்கலன்கள் சோதனை தளத்தில் வேற்றுக்கிரகவாசிகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது

அமெரிக்காவின் ரகசிய ஆயுதம் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள், விண்கலன்கள் சோதனை தளத்தில் வேற்றுக்கிரகவாசிகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ரகசிய விடியோ இப்போது வெளியே கசிந்துள்ளது. ஆனால் இதில் வரும் விண்கலனும், வேற்றுக்கிரகவாசிகளும் அமெரிக்க ராணுவமே ரகசியமாகத் தயாரித்துள்ளதாக அங்கு வேலைபார்க்கும் ஓர் ஊழியர் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

area51

ஏரியா 51 எனும் புனைப் பெயர் கொண்ட இந்த ராணுவத்தளம் மேற்கு அமெரிக்காவின் நெவேடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. (லாஸ் வேகாஸின் கீழ்ப்பகுதியில் வடக்கில் அமைந்துள்ளது). நெவேடாவின் மத்தியிலும் குரூம் ஏரியின் தென் கரைப் பகுதியிலும் அமைந்துள்ள இவ்விடம் பெரிய ரகசிய ராணுவ விமானத் தளமாகும்.

இந்த ராணுவதளத்தின் முக்கிய பயன்பாடானது பரிசோதனை ரீதியிலான விமானங்களுக்கும் ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கும் சோதனைக்கும் உதவி புரிவதேயாகும்.

area51

அமெரிக்க அரசினால் அவ்வாறு ஒரு இடம் இருப்பதாக அரிதாகவே ஒப்புக்கொள்ளப்படும் நிலையில், இந்த இடத்தைச் சுற்றியுள்ள மிகுந்த இரகசியத்தின் காரணமாக இத்தளம் சதிகார கோட்பாடுகளைப் பேசுவோரால் அடிக்கடி குறிப்பிடப்படும் விஷயமாகவும் அடையாளம் தெரியாத மர்ம (பறக்கும் தட்டு போன்ற) பறக்கும் பொருட்களைப் பற்றிய ஆய்வாளர்களுக்கும் மையப் பொருளாகிறது.

தற்போது ஏரியா 51 முன்னாள் பணியாளரால் வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்தது கையளவு, தெரியாதது உலகளவு என்பார்கள். இது 200 சதவீதம் உண்மை என்பதை இந்த தொகுப்பை படித்து முடித்தவுடன் தெரிந்து கொள்வீர்கள்.

area51

உலகளவில் விசித்திரம் மற்றும் ரகசியம் நிறைந்த பல்வேறு பகுதிகளை பற்றி அறிந்திருப்பீர்கள், ஆனால் ஏலியன்கள் வந்து செல்வதாக கூறப்படும் யுஎஃப்ஒ தளம் குறித்து அறிவீர்களா? உலகில் ஏரியா 51 தவிற பல்வேறு யுஎஃப்ஒ தளங்கள் இருக்கின்றது. 

area51

காலம் காலமாக பல்வேறு அறிக்கைகளின் மூலம் சான் லூயிஸ் பிரபலமான யுஎஃப்ஒ தளமாக அறியப்படுகின்றது. இங்கு அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளை தவிற நிழல் மனிதர்களின் நடமாட்டம் இருந்து வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.

area

விபத்தில் சிக்கிய யுஎஃப்ஒ ஒன்றை இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் கண்டுபிடித்து வென்சிலாஸ் மைன் பகுதியில் ஏலியன் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருவதாக சதி கோட்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.