அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு!

 

அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள  பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி ஐந்து நாட்கள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக 2 நாள்கள் பிரான்சில் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

இந்நிலையில் நேற்றிரவு தனிவிமானம் மூலம் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு  சென்றார். அப்போது அவரை பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நயான் விமான நிலையத்திற்கே நேரடியாக வந்து வரவேற்றார். அப்போது  அபுதாபி ராணுவ வீரர்களும் இந்திய பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். 

இதையடுத்து இருநாட்டுத் தலைவர்களும்  நல்லுறவுகள் குறித்து பேச இருக்கின்றனர். மேலும் அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயாத் விருது’ இந்திய  பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.