அமித் ஷா வைக்கும் டபுள் செக்… அடிமாடாகி போன அதிமுக… ஸ்டாலின் குஷியோ குஷி..!

 

அமித் ஷா வைக்கும் டபுள் செக்… அடிமாடாகி போன அதிமுக… ஸ்டாலின் குஷியோ குஷி..!

அடுத்து வரும் நாட்கள் அ.தி.மு.க.வுக்கு மிக கடுமையாகத்தான் இருக்கும் போல. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் நிர்பந்தம் அழுத்துகிறது. ஆனால் மக்களின் மன நிலை ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை.

அமித் ஷா வைக்கும் டபுள் செக்… அடிமாடாகி போன அதிமுக… ஸ்டாலின் குஷியோ குஷி..!

அடுத்து வரும் நாட்கள் அ.தி.மு.க.வுக்கு மிக கடுமையாகத்தான் இருக்கும் போல. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் நிர்பந்தம் அழுத்துகிறது. ஆனால் மக்களின் மன நிலை ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை.

அதேபோல் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக இரண்டு வருடங்கள் கூட இல்லை. பெரும்பான்மை இல்லாத நிலை போன்ற சூழலில் பா.ஜ.க.வின் தயவால் ஆட்சி நகர்ந்து கொண்டிருக்கிறது. இச்சூழலில் எதிர்வரும் தேர்தல்களில் அக்கட்சியுடனே மீண்டும் கூட்டணி வைத்தால், மீண்டும் கடுமையான தோல்விதான். ஒருவேளை பகைத்துக் கொண்டு, ‘கூட்டு இல்லை’ என்றால் ஆட்சிக்கு கொடுத்து வரும் பாதுகாப்பை தளர்த்துவது, வருமான வரித்துறை ரெய்டு என சரமாரியாக பாய்ந்துவிடும் பா.ஜ.க. எனவே அலறிக் கிடக்கிறது அ.தி.மு.க.

காலில் விழுந்து கதறினாலும் தாமரைக்கு ஓட்டுப் போட மாட்டேன் என அழுத்தம் காட்டும் தமிழகத்தில் எப்படி கட்சியை வளர்ப்பது? இதனால்தான் அமித்ஷாவின் வருகையால் நொந்து கிடக்கின்றனர் தமிழக பா.ஜ.க. தலைகள். ஆனால் அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் இதில் நோவது ஏன்?

அதை அக்கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது “அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஜெயித்தே ஆகணும்னா பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கவே கூடாதுன்னு எங்க கட்சி முடிவில் இருந்துச்சு. ஆனால் சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா அவங்க நிர்வாகிகளிடம் ‘அடுத்தும் அ.தி.மு.க.வோடுதான் கூட்டணி. இது உறுதி’ன்னு சொல்லிட்டார். இதை மறுத்தோ, எதிர்த்தோ நிலைப்பாட்டை எடுக்க எங்கள் கட்சி ஆளுங்களுக்கு தைரியமில்லை. ஆக இது ஒரு செக்.

இந்த நிலையில் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மிக அதிகமான இடங்களை நாங்க ஒதுக்கியே ஆகணும்னு அமித்ஷா சொல்லியிருக்கிறார். இதற்கு சம்மதிக்காத பட்சத்தில் ‘தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.’ என  அமித்ஷா சொன்னதாக எங்களின் தலைமையோட கவனத்துக்கு தகவலை சொல்லியிருக்குது தமிழக பா.ஜ.க.

அமித்ஷாவை எதிர்த்துக்கிட்டு எந்த முடிவும் எடுக்கும் சூழலில் நாங்க இல்லை. ஆக இது எங்கள் தலைமைக்கு வைக்கப்பட்ட டபுள் செக் தான். எந்த மாற்றமும் இல்லாமல் இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்து ஏகபோக மெஜாரிட்டியுடன் ஸ்டாலின் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. தள்ளியிருந்து வாழ்த்து சொல்ல வேண்டிதான்.” என்று முடித்தனர் வெறுப்பாக.

-thijai