அமித் ஷாவிடம் ஓ.பி.எஸை போட்டுக் கொடுத்த எடப்பாடி… அத்துவிட அல்லாடும் அதிமுக நிர்வாகிகள்..!

அமித் ஷாவிடம் ஓ.பி.எஸை போட்டுக் கொடுத்த எடப்பாடி… அத்துவிட அல்லாடும் அதிமுக நிர்வாகிகள்..!

காஷ்மீர் விஷயத்தில் அமித் ஷா  எடுத்திருக்கும் அதிரடி முடிவால் மோடியை விட சில படிகள் அதிகமாகவே அவருக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிடைத்துள்ளதோடு அவரைப் பற்றிய அலசல்களும் அதிகரித்துள்ளன.

அமித் ஷாவிடம் ஓ.பி.எஸை போட்டுக் கொடுத்த எடப்பாடி… அத்துவிட அல்லாடும் அதிமுக நிர்வாகிகள்..!

அவ்வளவு பிரம்மாண்டமான அமித்ஷாவே முன்வந்து நட்புக் கரம் நீட்டியும் கூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயங்கி, வருந்தியிருக்கிறார் என்று அ.தி.மு.க.வின் தலைமை கழகத்திலிருந்து கிசுகிசுப்புகள் கேட்கின்றன.

காஷ்மீர் விஷயத்தில் அமித் ஷா  எடுத்திருக்கும் அதிரடி முடிவால் மோடியை விட சில படிகள் அதிகமாகவே அவருக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிடைத்துள்ளதோடு அவரைப் பற்றிய அலசல்களும் அதிகரித்துள்ளன.

அவ்வளவு பிரம்மாண்டமான அமித்ஷாவே முன்வந்து நட்புக் கரம் நீட்டியும் கூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயங்கி, வருந்தியிருக்கிறார் என்று அ.தி.மு.க.வின் தலைமை கழகத்திலிருந்து கிசுகிசுப்புகள் கேட்கின்றன.

அப்படி என்ன சொல்லிட்டார் அமித்ஷா? அதுக்கு எடப்பாடிக்கு ஏன் வருத்தம்? என்று அந்த அலுவலக தரப்பில் விசாரித்தால் தகவல்கள் இப்படி வந்து விழுகின்றன. “கடந்த ரெண்டு வருஷமா ஆட்சியை கவிழாம காப்பாத்திட்டு இருக்கிறதுக்கான நன்றிக்கடனுக்காக பி.ஜே.பி. உடனான கூட்டணியை சகிச்சுக்கிட்டோம். நாங்க நினைச்சபடியே வெறித்தனமான தோல்வி பரிசா கிடைச்சுது. பா.ஜ.க.வோடு கூட்டு வெச்ச ஒரே காரணத்தால்தான் ஒத்த தொகுதியை தவிர அத்தனையிலும் தோற்றோம். எங்க மேலே அவ்வளவு வெறுப்பிருந்திந்தால் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாஷ் அவுட் ஆகியிருப்போமே. 

ஆக ஒருகுறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கிதான் எங்களை வெறுக்குது, மீதி அப்படியேதான் ஆதரவு தருதுங்கிறது நிரூபணமாயிடுச்சு. இந்த நிலையில் அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைக்கவே கூடாதுங்கிற எண்ணத்துலதான் முதல்வர் எடப்பாடியாரும் மற்றவர்களும் இருக்கிறோம். பன்னீரை பற்றி இந்த இடத்தில் ஏன் குறிப்பிடலேன்னா அவர் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டிய பா.ஜ.க.வின் வி.ஐ.பி. ஆகிட்டார்.

ஆட்சி கலைப்பு, ரெய்டுன்னு எதை சொல்லி மிரட்டினாலும் மீண்டும் பா.ஜ.க.வின் நட்பை ஏத்துக்கிறது தில்லை என்பதுதான்  இயற்றப்படாத தீர்மானமா கட்சியில் இருக்குது. இதை அமித்ஷாஜி நல்லாவே உணர்ந்து வெச்சிருக்கிறார். ஆனாலும் மீண்டும் எங்களையும் அவங்களோடு சேர்த்து புதைகுழிக்குள் இழுப்பதை எப்படி எடப்பாடியாரால் சகிச்சுக்க முடியும்? கட்சியும், ஆட்சியும், கழக வாக்கு வங்கியும் சிதறுவதில், சிதைவதில் அவருக்கு மிகப்பெரிய மன வருத்தம்.” என்றனர்.

மீண்டும் பி.ஜே.பி.யோடே கூட்டணி வைப்பதனால் நம்ம கட்சிக்கு என்னென பாதகங்கள், ஏதாவது சாதகம் இருக்குதா? என்று தனக்கு தோதான கொங்கு அமைச்சர்களோடு தீவிர ஆலோசனையை இரண்டு மூன்று ரவுண்டு பேசி முடித்துவிட்டாராம் எடப்பாடியார். ஆனால், யாருமே பாசிட்டீவான பதிலை சொல்லவேயில்லை என்பதுதான் இதில் நோட் பண்ண வேண்டிய தகவலே.