அமிதாப் பச்சன் வேடத்தில் தல அஜித்?

 

அமிதாப் பச்சன் வேடத்தில் தல அஜித்?

தல அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்தப்படம் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்தப்படம் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது. இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘பிங்க்’ பட தயாரிப்பாளர் சூஜித் சிர்கார் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது உண்மை தான் என்றும், படத்தை முடித்த பின் தன்னிடம் போட்டுக் காட்டுவதாக தெரிவித்துள்ளனர் என்றார்.

amitabh

இதனால், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘பிங்க்’ தமிழ் ரீமேக்காக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை காட்சிக்கு காட்சி ரீமேக் செய்யாமல், தமிழ் ரசிகர்களுக்கும், அஜித்துக்கும் ஏற்றவாறு காட்சிகளை அமைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் 2019ம் ஆண்டு இரண்டாம் பாதியில் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.