அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது’ : ரஜினி நெகிழ்ச்சி பதிவு!

 

அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது’ : ரஜினி நெகிழ்ச்சி பதிவு!

இதுவரை இந்த விருதை சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பாலிவுட் ஆளுமைகளும், தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் சிவாஜி கணேசன் ஆகிய ஜாம்பவான்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.

அமிதாப் பச்சனுக்கு  தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

amithabh

1969ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இது திரைத்துறையில் சாதனை படைத்துள்ள கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விருதை சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பாலிவுட் ஆளுமைகளும், தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் சிவாஜி கணேசன் ஆகிய ஜாம்பவான்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.

javadekar

இந்நிலையில் 2018ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டிவிட்டர் பக்கத்தில், ‘திரைத்துறையில் சாதனை படைத்த அமிதாப் பச்சனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இரண்டு தலைமுறைகளாக மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் அவருக்கு இந்த விருதை அளிப்பதன் மூலம் ஒட்டுமொத்த நாடும், சமூகமும் பெருமை கொள்ளும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Congratulations dear @SrBachchan ji !!! You richly deserve this commendable honour !!!! #DadaSahebPhalkeAward

— Rajinikanth (@rajinikanth) September 24, 2019

​ ​தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள  அமிதாப் பச்சனுக்கு திரைத்துறையினர் தங்கள் வாழ்த்துகளை  தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகரும் அமிதாப் பச்சனின் நண்பருமான ரஜினிகாந்த், பெரும் மதிப்புக்குரிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தகுதியானவர் என்று கூறியுள்ளதோடு தன்னுடைய வாழ்த்தையும் பதிவு செய்துள்ளார்.