அமிதாப்பின் ஜுந்த்! – ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகி வரும் ஜுந்த் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கத்தில் ஜுந்த் என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். ஸ்லம் சாக்கர் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த விஜய் பார்சே என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துவருகின்றனர். இதில் விஜய் பார்சே கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

amitabh-bachchan

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஓராண்டு ஆக உள்ள நிலையில் படத்தின் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் குடிசை பகுதியில் அமிதாப் பச்சன் நிற்கிறார். அவர் முன்பு குடிசைப் பகுதியும் ஒரு கால்பந்தும் இருக்கிறது. இந்த படத்தின் டீசர் நாளை (21ம் தேதி) வெளியிடப்படும் என்று படத்தைத் தயாரித்து வரும் டி சீரிஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான பூஷண் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.