அமாவாசையன்று மறந்தும் வாசலில் கோலம் போடாதீங்க… 

 

அமாவாசையன்று மறந்தும் வாசலில் கோலம் போடாதீங்க… 

தினந்தோறும் அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட்டால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். பின் ஏன் அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்?
அமாவாசையன்று முழுவதும் கோலம் போடக்கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்லவில்லை.

தினந்தோறும் அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட்டால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். பின் ஏன் அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்?
அமாவாசையன்று முழுவதும் கோலம் போடக்கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்லவில்லை.

new moon

அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம். அன்றைய நாளில் தர்ப்பணம் கொடுத்து முடித்ததும், வாசலில் கோலம் போடலாம். அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருந்தாலும் தவறில்லை. நம் இந்து மதத்தில், ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித்தனியாக ஒவ்வொரு திதி விசேஷமாக இருக்கிறது. விநாயகருக்கு சதுர்த்தியன்று விசேஷம். அதே போல் முருகனுக்கு உகந்த நாள் சஷ்டி. அதனால் தான் சஷ்டி விரதம் இருக்கிறோம். பெருமாளுக்கு ஏகாதசியன்று விசேஷம். பைரவரை அஷ்டமியன்று வழிபடுவதும் அதனால் தான். அதுவும் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அம்மனை பெளர்ணமியன்று வணங்கினால் இன்னும் சிறப்பு.

kolam

இதைப் போலவே, மறைந்த நமது முன்னோர்களுக்கு உகந்த தினமாக அமாவாசை இருக்கின்றது. அதனால் தான் ஒவ்வொரு மனிதனும் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசையன்று மட்டுமாவது தானம் தருமங்களைச் செய்ய வேண்டும் என்கிறது இந்து மதம். முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் முதலியவற்றை தவறாமல் அதனால் தான் அமாவாசையன்று செய்து வருகிறோம். 
நாம் இப்படி அமாவாசையன்று செய்கின்ற தர்ப்பணத்தினால், நமது முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். அதனால் தான் பிதுர் தர்ப்பணம் செய்யும் பொழுது எள்ளும், தண்ணீரும் இறைக்கிறோம். அமாவாசையன்று நம்மை ஆசிர்வதிக்க, நம் இருப்பிடத்தைத் தேடி நம் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களின் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்களின் பசியையும், தாகத்தையும் தணித்துக் கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள். அமாவாசையன்று தர்ப்பணமும் கொடுத்து, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றையும் செய்து வந்தால் பலன்கள் கிடையாது.

kolam

அதனால் தான் அமாவாசையன்று சிலவற்றை  நாம் தவிர்க்க வேண்டும். அதாவது வாசலில் கோலம் போடுவது, மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால், இவைகளை தவிர்க்க வேண்டும். அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ, பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்பி பூஜைகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.