அமாவாசையன்று நல்ல காரியங்கள் செய்யலாமா? கூடாதா?

அமாவாசையன்று நல்ல காரியங்கள் செய்யலாமா? கூடாதா?

அறிவியல் ரீதியாக அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வந்து எதிரெதிரே ஒன்றையொன்று சந்தித்துக் கொள்கிறது. ஆன்மிக ரீதியாக அமாவாசையன்று நம் முன்னோர்கள் புண்ணிய லோகத்திலிருந்து பூமிக்கு நம்மைக் காண வருகிறார்கள். 

amavasi

இந்து மதத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்து மதத்தினருக்குமே முன்னோர் வழிபாட்டுக்கு ஏற்ற நாள் அமாவாசை. மேலும், அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு விதமான காந்த சக்தி பூமியில் ஏற்படுகிறது. அமாவாசையன்று கடலில் அலைகள் பெரிது பெரிதாக பொங்கி எழுவது இதனால் தான். இந்த காந்தை அலைகளால் செரிமானத்திற்கு சிரமமாக இருக்கும் என்பதால் தான் அமாவாசையன்று அசைவ உணவுகளைத் தவிர்க்கிறோம். 

poojai

நம்மை காண்பதற்காக அமாவாசை தினத்தன்று பூமிக்கு வரும் நம் முன்னோர்கள், அப்படி வரும் பொழுது, அவர்களது வாரிசுகளான நாம் செய்து கொண்டிருக்கும் காரியங்களை பார்த்து, ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். இந்த நம்பிக்கையுடையவர்கள், அமாவாசையன்று பிதுர் தேவதைகளை வழிபட்டு புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்.