அமலா பாலுடன் காதல்? திருமணம்?: கொந்தளித்த விஷ்ணு விஷால்!

 

அமலா பாலுடன் காதல்? திருமணம்?: கொந்தளித்த விஷ்ணு விஷால்!

நடிகை அமலா பாலுடன் திருமணம் என பரவிய செய்திக்கு நடிகர் விஷ்ணு விஷால் கட்டமாக பதிலளித்துள்ளார்.

சென்னை: நடிகை அமலா பாலுடன் திருமணம் என பரவிய செய்திக்கு நடிகர் விஷ்ணு விஷால் கட்டமாக பதிலளித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவி ரஜினியுடனான திருமண வாழ்க்கையை விவாகரத்து செய்தார். தனது விவாகரத்து குறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக 50 நாட்களை கடந்தது.

இந்நிலையில், இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்த அமலா பாலை மறுமணம் செய்யவிருப்பதாக சில இணையதளங்களில் செய்திகள் பரவின. ஏற்கனவே நடிகை அமலா பால் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்தவர்.

விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் மறுமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக வெளியான செய்தியை பார்த்த நடிகர் விஷ்ணு விஷால், தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், ‘என்ன ஒரு கேவலமான செய்தி. கொஞ்சமாவது பொறுப்புணர்வுடன் செயலபடுங்கள். நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. எழுத வேண்டுமென ஏதாவது எழுதாதீர்கள்’ என பதிலடி கொடுத்துள்ளார்.

ratchasan

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.21ம் தேதி ரிலீசாகிறது. விரைவில் இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் விஷ்ணு விஷால் ஈடுபடவுள்ளார் என கூறப்படுகிறது.