அமலா பாலின் ஆடை படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? 

 

அமலா பாலின் ஆடை படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? 

நடிகை அமலா பாலின் ஆடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை அமலா பாலின் ஆடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் ரத்தினகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ள திரைப்படம் ஆடை.  இதில் அமலா பால் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் ஆடை திரைப்படம்  அடுத்த மாதம் (ஜூலை) 19 ஆம் தேதி  திரைக்கு வரவுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது .

முன்னதாக தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த திரைப்படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே 80 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது கவனிக்கத்தக்கது.