அமலா பாலின் ‘ஆடை’ படத்தில் பிஜிலி ரமேஷ்!

 

அமலா பாலின் ‘ஆடை’ படத்தில் பிஜிலி ரமேஷ்!

அமலாபால் நடித்து வரும் ’ஆடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிஜிலி ரமேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: அமலாபால் நடித்து வரும் ’ஆடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிஜிலி ரமேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தனது வீடியோக்களால் பலரையும் கவர்ந்த பிஜிலி ரமேஷ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பிஜிலி ரமேஷ் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது ‘மேயாத மான்’ இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் அமலா பால் நடித்து வரும் ‘ஆடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிஜிலி ரமேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வீ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அழுதபடி, உடலில் ரத்தக்கரையுடன், ஆடைகள் களைந்து வெறும் பேப்பரை மட்டும் அமலாபால் சுற்றியிருந்தார். இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.