அமலா பாலின் ஆடை படத்தில் இணைந்த விஜய் தொலைக்காட்சி பிரபலம்!

 

அமலா பாலின் ஆடை படத்தில் இணைந்த விஜய் தொலைக்காட்சி பிரபலம்!

ஆடை படத்தில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: ஆடை படத்தில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 ‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆடை’.  அமலா பால் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில்  படத்தின் டீஸர் வெளியானது. அதில் அமலா பால் நிறுவனமாகத் தோன்றியது சமூகவலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த படத்திலிருந்து மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், பிரபல விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்  தொகுப்பாளர் ரம்யா நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக ரம்யா சமீபத்தில் வெளியான டாப்சீயின் கேம் ஓவர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.