அமலா பாலின் ஆடை படத்திற்கு வாழ்த்து தெரிவித்த விஷால்! 

 

அமலா பாலின் ஆடை படத்திற்கு வாழ்த்து தெரிவித்த விஷால்! 

நடிகை அமலா பாலின் ஆடை  படத்திற்கு நடிகர் விஷால் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

சென்னை: நடிகை அமலா பாலின் ஆடை  படத்திற்கு நடிகர் விஷால் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

மேயாத மான் படத்துக்குப் பிறகு இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆடை’.  அமலா பால் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வருகிறது. 

இந்த படத்தில் இரண்டாம் பகுதியில் அமலா பால் நிர்வாணமாக வரும் காட்சி இருந்தாலும் அதை ஆபாசமாகப் பார்க்காமல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் அமலா பாலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்த படம் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘அமலாபாலுக்கு எனது வாழ்த்துக்கள். ஒரு துணிச்சலான கேரக்டரை ஏற்று நடித்துள்ள அமலாபால் இன்னும் பல சிகரங்களைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆடை படத்தில் அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது’  என்று குறிப்பிட்டுள்ளார்.