அமலாகிறது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்! சைக்கிள் கேப்பில் கிடா வெட்டிய  நிர்மலா சீதாராமன்

 

அமலாகிறது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்! சைக்கிள் கேப்பில் கிடா வெட்டிய  நிர்மலா சீதாராமன்

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள், மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். இதை எதிர்கொள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை அதாவது ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிவாரண திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று (மே13) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்கட்ட நிவாரண திட்டங்களை அறிவித்தார். அதில், சிறு குறு, நடுத்தர தொழில்துறைக்கு கடன் உதவி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். மொத்தம் 3.6 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் , “ புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு விலையில்லா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ பருப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். ரேஷன்கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விலையில்லா உணவுப்பொருட்கள் கிடைக்கும். இதன்மூலம் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் கிடைக்கும். நாடு முழுவதும் 23 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஆகஸ்ட் மாதத்துக்குள் 100% அமல்படுத்தப்படும்.புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்க 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

முத்ரா திட்டத்தில் வட்டிச்சலுகைக்காக ரூ.1500 கோடி செலவிடப்படுகிறது. முத்ரா திட்டத்தில் குறித்த காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாக கடனை திருப்பிச்செலுத்துவோருக்கு 2% வட்டிச்சலுகை வழங்கப்படும்” எனக்கூறினார்.