அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்! 

அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்! 

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தா‌ன் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து‌ ஜம்மு காஷ்‌மீர் முழுவதும் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. யாத்திரை முடித்தவர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயற்கையாக அமைந்த பனி லிங்கத்தை தரிசிக்க நாடுமுழுவதும் இருந்து லட்சக்கணக்கா‌ பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை தொடங்கி ஏராளமான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்தச் சூழலில், அமர்நாத் யாத்திரையை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக ராணுவத்துக்கு உளவுத் துறை தகவல் அளித்தது. 

இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் ராணுவம் சார்பில் தீவிர தேடுதல் பணி தொடர்ந்தது. குறிப்‌பாக சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பாகிஸ்தான் ஆயுதக் கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கிகள், ஸ்னைப்பர்கள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையிலும் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, அமர்நாத் யாத்திரை முடித்தவர்கள் உடனடியாக காஷ்மீரில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும்படி ஜம்மு காஷ்மீர் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ராணுவ லெஃப்டினென்ட் ஜெனரல் தில்லான், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் ராணுவமும்‌சதி செய்து வருவதாக தெரிவித்தார். காஷ்மீரில் இருந்து முக்கிய பயங்கரவாதிகளை விரட்டி அடிக்கும் பணிகளை ராணுவம் சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்த தில்லான், தற்போது ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத‌ அமைப்புகளின் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.