அமமுக என்றைக்குமே அதிமுகவில் சேராது: டிடிவி தினகரன் உறுதி

 

அமமுக என்றைக்குமே அதிமுகவில் சேராது: டிடிவி தினகரன் உறுதி

அமமுக கட்சி அதிமுகவுடன் என்றும் இணையாது டிடிவி தினகரன் கூறியுள்ளார்

சென்னை: அமமுக கட்சி அதிமுகவுடன் என்றும் இணையாது டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் தினகரனின் அமமுக கட்சியை இணைக்க பாஜக முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் டிடிவி தினகரனை தவிர்த்து யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என முதல்வர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அமமுக என்றைக்கும், அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை; 90% அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். ஸ்டாலின், ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். பாஜகவிற்கு எதிராக வலுவான அணி உருவாகக் கூடாது என்பதற்காக தான் ஸ்டாலின் இவ்வாறு செய்கிறார். திமுக, பாஜக உடன் ரகசிய கூட்டணியில் இருக்கிறது என்றார்.