அமமுகவுடன் தேமுதிக கூட்டணி?!- டிடிவி தினகரன் விளக்கம்

 

அமமுகவுடன் தேமுதிக கூட்டணி?!- டிடிவி தினகரன் விளக்கம்

அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியை முறித்துக் கொண்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார். தேர்தல் நெருக்கத்தில் திடீரென கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு கட்சிகளோடு கூட்டணி அமைக்குமா? என்பதுதான் தற்போது பேசு பொருளாக இருக்கிறது.

அமமுகவுடன் தேமுதிக கூட்டணி?!- டிடிவி தினகரன் விளக்கம்

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக தேர்தல் அறிக்கை வரும் 12 ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை, எப்போது வேண்டுமானாலும் கூட்டணி உறுதி செய்யப்படலாம். அதிமுகவின் ஏமாற்று அறிவிப்புகளை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். பல கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம். இறுதியானதும் தெரிவிக்கிறோம்” எனக் கூறினார்.