அமமுகவிலிருந்து விலகும் மற்றொரு முக்கிய நிர்வாகி?!

 

அமமுகவிலிருந்து விலகும் மற்றொரு முக்கிய நிர்வாகி?!

டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை.

அமமுக கட்சியினரோடு செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேசிய வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttv

அமமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி. இவர்  கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சி நிர்வாகிகளுடன், ‘போகும் அல்லது இருக்கும் இடத்தில் முகாந்திரம் இருக்க வேண்டும். இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் என்று பேசும் படியாக அந்த வீடியோ உள்ளது. இதனால் புகழேந்தி அமமுகவிலிருந்து விளக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. 

pugazhenthi

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள புகழேந்தி, ‘ தன்னை அசிங்கப்படுத்தவே அமமுக ஐ.டி.பிரிவு வீடியோ வெளியிட்டுள்ளது. அதிருப்தியில் உள்ளவர்களைச்  சமாதானப்படுத்தவே  அப்படி பேசினேன். முழு வீடியோவையும் வெளியிட வேண்டும். அதிருப்தி இருந்தால் தலைமையிடம் தான் அதுகுறித்து பேசியிருப்பேன்’ என்றார்.