அப்போலோ மருத்துவமனையில் ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்?-தோசையை திருப்பி போடும் அமைச்சர்!!!

 

அப்போலோ மருத்துவமனையில் ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்?-தோசையை திருப்பி போடும் அமைச்சர்!!!

அப்போலோ மருத்துவமனையில் ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார் என்ற புதிய தகவலை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார் என்ற புதிய தகவலை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரித்து வருகிறது.

அந்த வகையில், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு விவரங்களை அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் சில தினங்களுக்கு முன்னர் வழங்கியது. அதில், மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ.1.17 கோடி செலவானதாக கூறப்பட்டிருந்தது.

idli

மருத்துவமனையில் இருந்த போது, ஜெயலலிதா இட்லி மட்டுமே உணவாக சாப்பிட்டார் என அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் என பலரும் கூறிய நிலையில், ஜெயலலிதா ரூ.1 கோடிக்கா இட்லி சாப்பிட்டார்? பாக்குற வேலைய விட்டுட்டு பேசாமா இட்லி கடை வைச்சு பொழப்பு நடத்தலாம் என நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வந்தனர்.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார் என்ற புதிய தகவலை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி ரூபாய் ஒரு கோடிக்கு இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் என குற்றம் சாட்டிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்யவேண்டாம் என சொன்னது யார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

idli

ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என தெரிவித்த சிவி சண்முகம், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.