அப்போலோ மருத்துவமனைகளில் இ.எம்.ஐ வசதி அறிமுகம்!  

அப்போலோ மருத்துவமனைகளில் இ.எம்.ஐ வசதி அறிமுகம்!  

அப்போலோ மருத்துவமனைகளில் இ.எம்.ஐ எனப்படும் மாதாந்திர தவணை முறையில் பணத்தை செலுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என அம்மருத்துவமனையின் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். 

அப்போலோ மருத்துவமனைகளில் இ.எம்.ஐ எனப்படும் மாதாந்திர தவணை முறையில் பணத்தை செலுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என அம்மருத்துவமனையின் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உயர்ரக சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவமனைகளில் ஒன்று அப்போலோ. ஆனால் அங்கு சாமானியர்களால் சிகிச்சை பெற முடியாது. காரணம் அளவுக்கு மிஞ்சிய பணம் வசூல். பிற மருத்துவமனைகளை விட அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டார்.

அப்போலோ மருத்துவமனை

இந்நிலையில் பஜாஜ் ஃபின்சர்வ்(bajaj finserv) நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து அப்போலோ மருத்துவனைகளிலும் சிகிச்சை பெறுவதற்கு மாதாந்திர தவணை முறையில் பணத்தை செலுத்தி கொள்ளலாம் என்றும் பஜாஜ் ஃபின்சர்வ்(bajaj finserv) வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை மருத்துவக் கடனை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சை செலவுக்காக பணத்தை ஏற்பாடு செய்ய முடியாதவர்களுக்காக இம்முறையை அப்போலோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.