அப்பாவை காணவில்லை… காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மகன் அளித்த புகாரால் ம.பி-யில் பரபரப்பு!

 

அப்பாவை காணவில்லை… காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மகன் அளித்த புகாரால் ம.பி-யில் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சியை பிடிக்க பா.ஜ.க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. 2018 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மத்திய பிரதேசத்தில் தன்னுடைய தந்தையை காணவில்லை என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வின் மகன் போலீசில் புகார் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சியை பிடிக்க பா.ஜ.க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

mla missing

2018 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 116 எம்.எல்.ஏ-க்கள் தேவை என்ற நிலையில் 114 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சிகள் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தது. 
கர்நாடகா பாணியில் எம்.எல்.ஏ-க்களை விலைக்க வாங்கி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேரை பா.ஜ.க கடத்திக்கொண்டுபோய் குருகிராமில் வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 
காணாமல் போன எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனுப்பூர் எம்.எல்.ஏ பிசாஹுலால் சிங் பெயரும் ஒன்று. இந்த நிலையில் இவரது மகன் தன்னுடைய தந்தையை காணவில்லை என்று போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் கடந்த மார்ச் 2ம் தேதி என்னுடைய தந்தை ராய்ப்பூருக்கு செல்வதாக கூறி கிளம்பினார். அதன்பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை” என்ற கூறியுள்ளார்.

mla

எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்படுகிறார்கள், ஜனநாயகத்தை படுகொலை செய்ய முயற்சிகள் நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சி புலம்பி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தி காரணமாகவே எம்.எல்.ஏ-க்கள் வெளியேறி வருகின்றனர் என்று பா.ஜ.க மறுப்பு தெரிவித்து வருகிறது.