‘அப்பாவுக்கு கடிதம் எழுதினால் பரிசு’ சென்னை காவல்துறை நடத்தும் போட்டி!

 

‘அப்பாவுக்கு கடிதம் எழுதினால் பரிசு’ சென்னை காவல்துறை நடத்தும் போட்டி!

‘அன்புள்ள…. என்று தொடங்கி, கடிதம் எழுதுவதெல்லம் சென்ற தலைமுறையோடு போய்விட்டது என்றே சொல்லலாம். அதற்கு அடுத்து, பேஜர், எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல், வாட்ஸப், ஃபேஸ்புக் என தகவல் பரிமாற்ற சாதனங்கள் அதிகரித்துவிட்டன. உண்மைதான். முன்பை விட வெகு விரைவில் நீங்கள் நினைப்பவருக்கு சொல்ல வேண்டிய செய்தியைத் தெரிவித்துவிடலாம். ஆனால், கடிதம் எழுதும் விதம்போல அது நிச்சயம் ஆகாது.

பழைமைவாதிகள் என்று நினைத்துக்கொண்டாலும் பரவாயில்லை. கடிதம் எழுதுவதால் தகவல் பரிமாற்றம் என்பதைக் கடந்தும் பல பயன்கள் நமக்குக் கிடைத்தன. முதலில், தெளிவான கையெழுத்து. பிறகு ஒருவரைத் தொடர்புகொள்ளுகையில் ஒரு ஆர்டரின்படி விசாரிப்பது, கடிதம் எழுதி, அவரிடம் சென்று மறுகடிதம் வரும்வரை காத்திருக்கும் தன்மை… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். சரி.. சரி.. ஏன் இதையெல்லாம் இப்போது நினைவூட்ட வேண்டும் என்ற கேள்வி வருகிறதா? அதற்கான விடையை சென்னைக் காவல் துறை சொல்லவிருக்கிறது.

‘அப்பாவுக்கு கடிதம் எழுதினால் பரிசு’ சென்னை காவல்துறை நடத்தும் போட்டி!

கொரோனா நோய்த்தொற்றல் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் பாதிக்கப்படும் மனிதர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. கொரோனா நோய்ப்பரவைத் தடுக்க தனி மனிதர்களின் ஒத்துழைப்பு அவசியம். அதை அழகாக ஒரு கடிதமாக எழுதி அனுப்பும் போட்டியை நடத்துகிறது சென்னை பெருநகர காவல்துறை. அதுவும் தந்தையர் தினத்தி முன்னிட்டு. அதன் வழிகாட்டல் கடிதத்தில்,

சென்னை பெருநகர காவல்துறை மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி இணைந்து வழங்கும் அன்புள்ள அப்பா. குழந்தைகளே, தந்தையர் தினத்தன்று உங்களது தந்தையை பாதுகாப்பாக இருந்திட வலியுறுத்துங்கள்.

கோவிட் 19 நோய்த் தொற்று பரவலாக இருக்கும் இக்காலத்தில், உங்களது பாதுகாப்பை போல உங்களது தந்தையின் பாதுகாப்பும் முக்கியம் என்பதை அவரிடம் வலியுறுத்துங்கள். கோவிட் 19 நோய் பரவாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அவருக்கு ஒரு கடிதமாக எழுதி எங்களிடம் பகிருங்கள்.

சிறந்த கடிதங்கள் சென்னை பெருநகர காவல்துறையின் முகநூல் பக்கத்தில் பகிரப்படும். அது மட்டுமல்ல, பரிசுகளும் உண்டு. பங்கு பெரும் அனைவருக்கும் டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பங்கேற்க கிளிக் செய்யுங்கள்.
https://docs.google.com/…/1FAIpQLSdC1uLF37AvoXRiq…/viewform….

இந்தப் போட்டியில் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். உங்கள் கடிதங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஜூன் மாதம் 30 நாள். சிறுவர்கள் எல்லோரும் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளையும் சான்றிதழையும் பெறுங்கள்.