அப்பாவுக்காக உணவு சமைத்த விஜயகாந்தின் மகன்: வைரலாகும் வீடியோ காட்சி!

 

அப்பாவுக்காக  உணவு சமைத்த விஜயகாந்தின் மகன்: வைரலாகும் வீடியோ காட்சி!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தனது தந்தைக்காக தோசை சுடும் காட்சியை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாகச் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவரும் நிலையில் விஜயகாந்த் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன்  தோசை சுடும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனது அம்மா அப்பாவிற்காக தான் உணவு சமைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே விஜயகாந்த் உடல்நிலை குறித்து உருக்கமாக வீடியோ பதிவை வெளியிட்ட விஜய் பிரபாகரன் தன் தந்தைக்காக உணவு சமைப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தீபாவளியன்று  விஜயகாந்த்  தனது குடும்பத்தோடு பட்டாசு வெடித்து  தீபாவளியை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.