அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா வாங்காத ஊமக்குத்தா; ஹர்பஜன் கலாய்!

 

அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா வாங்காத ஊமக்குத்தா; ஹர்பஜன் கலாய்!

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

சென்னை: சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்ததை நக்கலடித்து ஹர்பஜன் சிங் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது ஐபிஎல் லீக் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

harbhajan singh

கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்து விழ, இறுதியாக அந்த அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 108 ரன்களை எடுத்தது. சென்னை அணியின் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகள், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகள்,  இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகள், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

dhoni, harbhajan, raina

இதனையடுத்து  109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில், கொல்கத்தா அணி தோல்வியடைந்ததை நக்கலடித்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிட்ட வாங்காத ஊமக்குத்தா. மூணு நாள்ல சொன்ன மீட்டு  இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போடவெச்சுருச்சா #தல வேட்டு #CSKvKKR அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி #CSK மேட்சுனாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா” என பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க

சென்னை ரசிகர்களுக்கும், உங்களுக்கும் இடையேயான உறவு எத்தகையது? தல தோனியின் நெகிழ்ச்சியான பதில்!