அப்படியே அதுங்களையும் கவனிங்க… மோடிக்கு அமெரிக்க நடிகை கடிதம்

அப்படியே அதுங்களையும் கவனிங்க… மோடிக்கு அமெரிக்க நடிகை கடிதம்

பேவாட்ச்,வி.ஐ.பி போன்ற தொடர்களில் நடித்த பிரபல கனடியன்- அமெரிக்கன் நடிகை பமீலா ஆண்டர்சன்.90 களில் பிளேபாய் பத்திரிகை அட்டைப்படத்தில் இடம்பிடித்த கவர்ச்சி நடிகை.இப்போது 52 வயது ஆகிறது.இப்போது சமூக செயற்பாட்டாளராக ஆகிவிட்ட பமீலா ஆண்டர்சன் விலங்குகள் பாதுகாப்பு இயக்கமான பீட்டாவின் கெளரவ இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.

pamila anderson

அவர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் இந்தியா சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற நாடு என்றும்,இந்திய அரிசிச் சோற்றின் நிறமும்,சைவ பிரியாணியின் மனமும் தனக்கு பிடிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். ஜெர்மனி,சீனா என்று போகிற இடங்களில் எல்லாம் சைவ உணவை வற்புறுத்துவதற்காக மோடியை பாராட்டி விட்டு,நீங்கள் ஏன் இந்தியாவில் , அரசு சார்பில் நடக்கும்.விருந்துகளில் சைவம் மட்டுமே பரிமாறக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

delhi

இந்தியாவில்,குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபட்டிருப்பது குறித்த தமது கவலையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் பமீலா ஆண்டர்சன் கடைசியாக ஒரு முக்கியமான கேள்வியை கேட்கிறார்.சைவ உணவுக்கு தேவையான பால்,தயிர்,வெண்ணை போன்றவற்றிற்காக கால் நடைகளை வளர்க்க வேண்டி இருக்கிறது.ஆனால் , அவற்றால்தான் சுற்றுச் சூழலும் ,காற்றும் மாசுபடுகின்றன.மாசு பட்ட காற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மனிதர்கள் ‘ மாஸ்க்’ அணிந்து கொள்ளலாம்.வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து கொள்ளலாம் ஆனால்,கால் நடைகள் என்ன செய்யும் என்று தனது கவலையையும் தெரிவித்து இருக்கிறார்.

modi

பசுமாட்டின் மூச்சுக்காற்றே ஆக்சிஜன் என்பது பமீலாக்கு தெரிய வில்லையா, இல்லை இந்தியாவில் கால்நடைகள் வளர்ப்பதையே பீட்டா எதிர்க்கிறதா ,அல்லது ஆடுமாடுகளுக்கு ஸ்வட்டர் மட்டும் போதாது,மாஸ்க்கும் மாட்டிவிட வேண்டும் என்கிறாரா என்பது அந்தக் கடிதத்தில் தெளிவு படுத்தப்படவில்லையே என்று டெல்லி வட்டாரம் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.