அபிராமியின் காதல் பரிசை திருப்பி கொடுத்த முகின்: வீடியோவில் வெளியான உண்மை!

 

அபிராமியின் காதல் பரிசை திருப்பி கொடுத்த முகின்: வீடியோவில் வெளியான உண்மை!

முகினிடம் பாசம் காட்டிய அபிராமி பலமுறை தான் முகினை காதலிப்பதாக வெளிப்படையாகக் கூறினார். 

பிக் பாஸ் போட்டியாளர்களான  அபிராமி பரிசாக கொடுத்த மோதிரத்தை முகின்  திருப்பி கொடுத்துள்ளார். 

abhi

பிக் பாஸ்  3  நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசியாவை  சேர்ந்த முகின் பாடல் பாடுவது, கலைநயமிக்க பொருட்கள் செய்வது என ஆரம்பத்தில் உற்சாகமாகக் காணப்பட்டார்.  

bb

போட்டியாளர்கள் தங்களை பற்றி அனைவர் மத்தியிலும் கூறிய போது, முகின்  சிறுவயதிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறி அனைவரையும்  சோகத்தில் ஆழ்த்தினார். இதனால் முகினிடம் பாசம் காட்டிய அபிராமி பலமுறை தான் முகினை காதலிப்பதாக வெளிப்படையாகக் கூறினார். 

 

ஆனால் முகின் மலேசியாவில் நான்  நதியா என்பவரை காதலிக்கிறேன். நிகழ்ச்சி முடிந்து வந்ததும் அவர் தன் பதிலை சொல்வதாகக் கூறியிருக்கிறார் என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் அபிராமி தொடர்ந்து முகினுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார். மேலும் தான் ராசியாக நினைத்து அணிந்திருந்த மோதிரம் ஒன்றையும் முகினுக்கு அபிராமி கொடுத்துவிட்டுச் சென்றார். இறுதிப்போட்டி வரை முகின்  அந்த மோதிரத்தைத் தனது சுண்டுவிரலில் மாட்டிக்கொண்டிருந்தார்.

 

இந்நிலையில் அபிராமி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர் முகினுக்கு   கொடுத்திருந்த மோதிரத்தை அவர் தனது கைவிரலில் அணிந்துள்ளார். இதன்மூலம் முகின்  அபிராமி கொடுத்த மோதிரத்தை அவரிடமே திருப்பி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.