அபிநந்தன் மீசை, அபிநந்தன் சேலை : பிராண்டான அபிநந்தன்

 

அபிநந்தன் மீசை, அபிநந்தன் சேலை : பிராண்டான அபிநந்தன்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் ஸ்டைலில் இளைஞர்கள் மீசை வைத்ததை தொடர்ந்து, அபிநந்தன் முகம் பதித்த சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் ஸ்டைலில் இளைஞர்கள் மீசை வைத்ததை தொடர்ந்து, அபிநந்தன் முகம் பதித்த சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படையும், பாகிஸ்தான் விமானப்படையும் மோதிக் கொண்டது. இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா என இருவருக்குமே சேதம் அதிகம். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தால் அபிநந்தன் எனும் இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடிபணியாமல் பேசிய வீடியோ வெளியானது, இதனால் இந்தியர்கள் பலரும் அவர் வீரத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் பாகிஸ்தான் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பினார். அபிநந்தனை ரோல்மாடலாக நினைக்கும் பல இளைஞர்கள், அவரைப் போலவே மீசை வைக்கத் துவங்கினார்கள். இந்நிலையில் அபிநந்தன் முகம் பதிக்கப்பட்டுள்ள சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

abi

அபிநந்தனின் உருவம் மற்றும் இந்திய விமானப் படை உள்ளிட்டவைகள் இதில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.