அபிநந்தன் எங்க சாதி தெரியுமா; சமூக வலைதளவாசிகள் அட்ராசிட்டி?!

அபிநந்தன் எங்க சாதி தெரியுமா; சமூக வலைதளவாசிகள் அட்ராசிட்டி?!

பாகிஸ்தான் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், அவர் எங்கள் சாதி என சமூக வலைதளவாசிகள் பலர் சாதிப் பெருமை பேசி வருகின்றனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், அவர் எங்கள் சாதி என சமூக வலைதளவாசிகள் பலர் சாதிப் பெருமை பேசி வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படையும், பாகிஸ்தான் விமானப்படையும் மோதிக் கொண்டது. இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா என இருவருக்குமே சேதம் அதிகம். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தால் அபிநந்தன் எனும் இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடிபணியாமல் பேசிய வீடியோ வெளியானது, இதனால் இந்தியர்கள் பலரும் அவர் வீரத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் பாகிஸ்தான் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பினார். இந்நிலையில் அபிநந்தன் எங்க சாதிக்காரர் என சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் உலாவத் துவங்கியுள்ளது.

hima das

மக்களால் கொண்டாடப்படுபவர்களை தங்கள் சாதி என மார்தட்டி சாதிய பெருமை பேசுவது இந்திய மண்ணில் நிகழ்வது ஒன்றும் புதிதல்ல, தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த ஹிமா தாஸின் சாதியை கூகுளில் அதிகமாக தேடியது குறிப்பிடத்தக்கது.

abhi

சாதி பெருமை பேசும் கும்பல் அபிநந்தனையும் விட்டுவைக்கவில்லை.