அபிநந்தனிடம் ராணுவ ரகசியத்தை கைப்பற்றியதா பாகிஸ்தான்?

 

அபிநந்தனிடம் ராணுவ ரகசியத்தை கைப்பற்றியதா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனிடம் ராணுவ ரகசியங்கள் எதையும் பாகிஸ்தான் கைப்பற்றியதா என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனிடம் ராணுவ ரகசியங்கள் எதையும் பாகிஸ்தான் கைப்பற்றியதா என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் இதழான ‘டான்’ வெளியிட்டுள்ள செய்தியில், முகமது ரசாக் சவுத்ரி என்பவர் இரண்டு விமானங்கள் சுடப்படுவதைப் பார்த்தார். ஒன்று எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைக் கடந்து இந்திய எல்லைக்குள் விழுந்தது. மற்றொரு விமானம் வெடித்து, அதிலிருந்து புகை வர ஆரம்பித்தது. பாராசூட் மூலம் பத்திரமாகத் தரையிறங்கினார் அதிலிருந்த விமானி அபிநந்தன்.

பிஸ்டலுடன் இருந்த அவர், அங்கிருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா, பாகிஸ்தானா என்று கேட்டுள்ளார். அவர்கள் இது இந்தியா என்று பொய் சொல்லியிருக்கிறார்கள். மகிழ்ச்சியில் இந்தியாவை ஆதரித்து கோஷமிட்டார் அபிநந்தன். இளைஞர்களிடம், தன்னுடைய முதுகுப்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இந்தியாவை ஆதரித்து கோஷமிட்டது அந்த இளைஞர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள், அபிநந்தனைத் தாக்கத் தொடங்கினார்கள். உடனே வானில் சுட்டவாறே ஓட ஆரம்பித்தார் அபிநந்தன். அவர்கள் அருகே வருவதைத் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து சுட்டுக்கொண்டே ஓடினார்.

ஆனால், தான் துரத்தப்படுவதை உணர்ந்த அவர், அருகில் இருந்த சிறிய குளத்துக்குள் குதித்தார். தன்னிடமிருந்த இந்திய ஆவணங்களையும் வரைபடங்களையும் நீருக்குள் மூழ்கடிக்க முயற்சித்தார். இதனிடையே துரத்திய இளைஞர்களில் ஒருவர் அபிநந்தனின் காலில் சுட்டார்; மற்றவர்கள் அபிநந்தனை சூழ்ந்துகொண்டு தாக்கினர். இதனிடையே அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அவர்களிடம் இருந்து அபிநந்தனை மீட்டனர்” என்று டான் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.