அன்லிமிடெட் வாய்ஸ்கால் உடன் இலவச லேண்ட்லைன் சேவை – டாடா ஸ்கை பிராட்பேண்ட் விரைவில் சலுகை

 

அன்லிமிடெட் வாய்ஸ்கால் உடன் இலவச லேண்ட்லைன் சேவை – டாடா ஸ்கை பிராட்பேண்ட் விரைவில் சலுகை

அன்லிமிடெட் வாய்ஸ்கால் உடன் இலவச லேண்ட்லைன் சேவையை வழங்கும் வகையில் டாடா ஸ்கை பிராட்பேண்ட் விரைவில் சலுகை அறிமுகம் செய்ய உள்ளது.

டெல்லி: அன்லிமிடெட் வாய்ஸ்கால் உடன் இலவச லேண்ட்லைன் சேவையை வழங்கும் வகையில் டாடா ஸ்கை பிராட்பேண்ட் விரைவில் சலுகை அறிமுகம் செய்ய உள்ளது.

டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் இலவச லேண்ட்லைன் சேவை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் இரண்டும் ஏற்கனவே தங்கள் பிராட்பேண்ட் சேவைகளுடன் லேண்ட்லைன் வசதிகளையும் வழங்குகின்றன. எனவே இந்த நடவடிக்கை மூலம் டாடா ஸ்கை பிராட்பேண்ட் மேற்கண்ட நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஸ்கை நிறுவனம் அன்லிமிடெட் பிராட்பேண்ட் திட்டங்களுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ்கால் பலனையும் வழங்க திட்டமிட்டுள்ளது. அன்லிமிடெட் அதிவேக டேட்டா சலுகைகளுடன் டாடா ஸ்கை பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ.900 விலையில் இருந்து தொடங்குகிறது.

tata sky

இலவச லேண்ட்லைன் சேவை குறித்து அதிக விவரம் இல்லாமல் ஆன்லைனில் டீசர் போஸ்டரை டாடா ஸ்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘அன்லிமிடெட் ஸ்ட்ரீம்’  மற்றும் ‘அன்லிமிடெட் வாய்ஸ்கால்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய லேண்ட்லைன் சேவையுடன் அன்லிமிடெட் வாய்ஸ்கால் சலுகைகளை இந்த சேவை வழங்கும் என்று இது அறிவுறுத்துகிறது. மேலும் இந்த சலுகை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டாடா ஸ்கை நிறுவனம் அந்த டீசர் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.