அன்று சுபஸ்ரீ… இன்று அனுராதா…அதிமுகவின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?

 

அன்று சுபஸ்ரீ… இன்று அனுராதா…அதிமுகவின்  விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?

அவரை பின் தொடர்ந்து வந்த லாரி, அனுராதாவின் கால்கள் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா என்ற பெண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதனால் நேற்று காலை பணிக்கு செல்வதற்காக அனுராதா இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

admk

அப்போது எதிர்பாராத விதமாக கோல்டுவின்ஸ்  சாலை  ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தது.  இதனால் அனுராதா நிலை தடுமாறி விழுந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த லாரி, அனுராதாவின் கால்கள் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

anu

இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுராதா அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த 10ஆம் தேதி  அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் நடந்துள்ளது. அதற்காகவே போஸ்டர்களும், கோடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன.  இதுவே விபத்துக்குக் காரணம்  என்று கூறும் அப்பகுதி வாசிகள், போலீசார் இதை மூடிமறைப்பதாக தெரிவித்துகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனேவே அதிமுகவின் பேனரால்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியான நிலையில் தற்போது மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பொது  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.