“அன்றாடங்காய்ச்சியெல்லாம் வாழும்போது ஒரு அதிகாரி இப்படி செய்யலாமா ?-கோவாவில் குடும்பத்தோடு தற்கொலை… 

 

“அன்றாடங்காய்ச்சியெல்லாம் வாழும்போது ஒரு அதிகாரி இப்படி செய்யலாமா ?-கோவாவில் குடும்பத்தோடு தற்கொலை… 

மாபூசாவுக்கு அருகிலுள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக ஷாவுக்கு வேலை கிடைத்த பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் கோவா சென்றார்.ஆனால் செவ்வாயன்று நால்வரும் தற்கொலை செய்துகொண்டு படுக்கையறையில் இறந்து கிடந்தனர்.

கோவாவில் ஒரு அபார்ட்மெண்டில் செவ்வாய்க்கிழமை இரண்டு மைனர்கள் உட்பட நான்கு பேர் அடங்கிய குடும்பம் தற்கொலை செய்துகொண்டு இறந்து கிடந்தது . 
வடக்கு கோவாவின் மாபூசா நகரத்திற்கு அருகிலுள்ள தங்களது குடியிருப்பில் கவிதா துமலே, 40,  கவிதாவின் கணவர் ஷாஹு துமலே, 45மற்றும் அவர்களின் மகன்கள் – பராஸ், 9, மற்றும் சாய்ராஜ், 3, ஆகியோர்  வசித்து வந்தார்கள் .பனாஜிக்கு வடக்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாபூசாவுக்கு அருகிலுள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக ஷாவுக்கு வேலை கிடைத்த பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் கோவா சென்றார்.ஆனால் செவ்வாயன்று நால்வரும் தற்கொலை செய்துகொண்டு படுக்கையறையில் இறந்து கிடந்தனர்.ஷாஹு துமலே குடியிருப்பின் வெளி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

goa family suicide

“நாங்கள் ஒரு தற்கொலை  குறிப்பையும் கண்டுபிடித்துள்ளோம்.அந்தக் குறிப்பில் சிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம்.அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று உடல்களில் காயம்  உள்ளன.ஷாஹு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்,” துணை போலீஸ் சூப்பிரண்டு  செய்தியாளர்களிடம் கூறினார்.

suicide

“முறையான விசாரணைக்கு பிறகே தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் . கதவு உள்பக்கம்  பூட்டப்பட்டிருந்தது. உறவினர் ஒருவர் மூலம் இந்த சம்பவம் குறித்து  போலீசாருக்குத் தெரிய வந்தது,” என்று அவர் கூறினார்.