அன்னையர் தினம் ஸ்பெஷல்: லாரன்ஸ் செய்ய போகும் நல்ல காரியம் இதுதான்?!

 

அன்னையர் தினம் ஸ்பெஷல்:  லாரன்ஸ் செய்ய போகும் நல்ல காரியம் இதுதான்?!

நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். 

சென்னை:  நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். 

நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ்  சமீபத்தில்  இயக்கி நடித்த காஞ்சனா 3 திரைப்படம் வெளியாகி 130 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளது. இதையடுத்து மும்பையில் ‘தர்பார்’ ஷூட்டிங்கில் படுபிஸியாக உள்ள ரஜினியை சந்தித்து ஆசி வாங்கிய லாரன்ஸ் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் செய்யும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.   அக்ஷய்குமாரை வைத்து எடுக்கும் இந்த திரைப்படத்திற்கு   லக்ஷ்மி பாம்  என்று பெயரிடப்பட்டுள்ளது. 

rajini

திரைப்படங்கள் மட்டுமில்லாது சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வரும் லாரன்ஸ், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். அதே சமயம் கிடைக்கும் இடங்களிலும் மேடைகளிலும் தன் அம்மா குறித்தும் பேச லாரன்ஸ் என்றுமே மறந்ததில்லை. 

lawrence

இந்நிலையில்  அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற பெற்றோர்களைக் காக்கும் நோக்கில் தாய் என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தொடங்க இருக்கிறார் லாரன்ஸ். மேலும் இந்த விழாவில் அன்னையின் சிறப்புகள் குறித்த வீடியோ ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. 

lawrence

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், கடந்த சில வருடங்களுக்கு ஆதரவற்ற நிலையிலிருந்த மனநலம் சரியில்லாத தாய் ஒருவர் என்னிடம் வந்து என்னை ஏன் விட்டுவிட்டுச் சென்றாய் என்று கேட்டார். என்னிடம் மட்டுமல்ல என்னைப் போன்ற பலரிடமும் அந்த தாய் இதே கேள்வியைக் கேட்டார். அந்த சம்பவம் எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் தாயின் பெருமைகளைப் பேசும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளேன். இதன் மூலம் சமூகத்தில் ஏதேனும் ஒரு சின்ன மாற்றம்  வந்தாலும் அது சந்தோஷம் தான்’ என்றார்.