அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

 

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

சசிகலாவை வருகின்ற 13-ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை: சசிகலாவை வருகின்ற 13-ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்காக வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

அந்த வழக்கின், மறு குற்றச்சாட்டு மனுவை பதிவு செய்ய வரும் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த அழைத்து வருமாறு பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, வருகின்ற 13-ஆம் தேதி சசிகலா சென்னை அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கடந்தாண்டு நடைபெற்ற வருமான வரிச் சோதனை தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்காக சிறை நிர்வாகத்திடம் வருமான வரித்துறை அனுமதி கோரியிருந்தது. அதனையடுத்து, வருகின்ற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.