அனைவருக்கும் ஜன.9 முதல் ரூ. 1000த்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்படும்- தமிழக அரசு

 

அனைவருக்கும் ஜன.9 முதல் ரூ. 1000த்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்படும்- தமிழக அரசு

தமிழகத்தில் ஜன.9 முதல்  12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஜன.9 முதல்  12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  பொங்கல் பரிசுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன் படி,  முந்திரி, திராட்சை, சர்க்கரை,கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்களையும் ரூ.1000 ரூபாய் பணத்தை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வழங்கவும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் வந்ததால், தேர்தலுக்கு முன்பாகவே பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 9 மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கலாம் என்று உத்தரவிட்டது. அதனால், பொங்கல் பரிசு வழங்கும் பணி 27 மாவட்டங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. உள்ளாட்சி உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து தேர்வு முடிவுகள் 2 ஆம் தேதியன்று வெளியாவதையடுத்து ஜன.9 முதல்  12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பொங்கல் பரிசு

ஜன.9 முதல்  12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்காமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜன.13 பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியது. பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.