அனைத்து வீடுகளுக்கும் அதிவேக இணைய சேவை..! அசத்தும் எடப்பாடி…

 

அனைத்து வீடுகளுக்கும் அதிவேக இணைய சேவை..! அசத்தும் எடப்பாடி…

தமிழக முதல்வர்  சுமார் ரூ. 1,815 கோடி செலவில் அனைத்து கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் அதிவேக இணைய சேவையை செயல்படுத்த உள்ளார்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தள சேவை மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இணைய சேவை மக்களின் வாழ்வாதாரத்தில் ஒன்றாக மாறி விட்டது. விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளவும், தகவல்களை உடனுக்குடன் பெறவும் பயன்படுவதால் இதனை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

Minister R.P Udaya kumar

சென்னை அண்ணா சாலையில் மின் ஆளுமைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதய குமார், ” அவர் அமெரிக்கா சென்றிருந்த பொது தமிழ் மக்களே ஐ.டி துறையில் பெரும்பான்மையாக உள்ளனர் என்றும் தகவல் தொழில் நுட்பத்தில் புதிய சேவைகளை அரசு தொடங்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும், அதனை செயல் படுத்தும் விதமாக, சட்டப்பேரவையில் விதி எண் 110 ன் கீழ் இல்லந்தோறும் இணையம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர்  சுமார் ரூ. 1,815 கோடி செலவில் அனைத்து கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் அதிவேக இணைய சேவையை செயல்படுத்த உள்ளார் என்று வருவாய் மற்றும் தொழில் தொடர்புத் துறை அமைச்சர் ஆர்.பி உதய குமார் தெரிவித்துள்ளார்