அனைத்து வளங்களையும் தரும் அஷ்டலட்சுமி வழிபாடு*

 

அனைத்து வளங்களையும் தரும் அஷ்டலட்சுமி வழிபாடு*

ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளைச் சொல்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் இந்த அஷ்ட லட்சுமிகளையும் மறக்காமல் துதித்து வந்தால், வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளைச் சொல்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் இந்த அஷ்ட லட்சுமிகளையும் மறக்காமல் துதித்து வந்தால், வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும். 
வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நீராடி, தூய்மையான ஆடை உடுத்தி, குலதெய்வத்தை மனதுள் நிறுத்தி, உத்தரவைப் பெற்றுக் கொண்டு விநாயகர் பூஜையை துவங்குங்கள். எல்லா காரியங்களுக்கும் முதல் கடவுள் விநாயகன் தானே?
கணபதி பூஜையை முடித்து விட்டு, இந்த அஷ்டலட்சுமிகளையும் வழிபட்டு வர, வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும். 

athilakshmi

1. ஆதிலட்சுமி
ஆதிலட்சுமியைத் தான் மகாலட்சுமி என்று அழைக்கிறோம். பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள் மகாலட்சுமி. திருமகளின் மிகப் பழைமையான தோற்றத்தில் இருப்பவள் தான் இந்த ஆதிலட்சுமி .இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.

dhanalakshmi

 2.தனலட்சுமி
பக்தர்களுக்கு தனத்தை வாரி வழங்கிக் கொண்டிருப்பவள். பொன்,பெருள், பணம் என்பவற்றை அருளும் அன்னை. சக்கரம்,சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.

dhaniyalakshmi

 3.தானியலட்சுமி
வேளாண்மை வளத்தைப் பெருக்கும் தேவி. பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.

gajalakshmi

4.கஜலட்சுமி
கால்நடைகள் மூலம் வளத்தை அருள்பவள். இவளே அரசரொக்கும் பெருஞ் செல்வங்கள் தருபவள். பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே தான். இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.

santhanalakshmi

5.சந்தானலட்சுமி
குழந்தைப் பேறு அருளும் திருமகள். கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தை ஒன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.

thariyalakshmi

6.தைரியலட்சுமி
வீரம், வலிமை போன்ற குணங்களைத் தருபவள். துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய எண்கரத்தினள்.

vijayalakshmi

7.விஜயலட்சுமி
யுத்தங்களில் மட்டுமின்றி, எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற அருள்பவள் விஜயலட்சுமி. விஜய என்றால் வெற்றி என்று பொருள். சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.

vidhyalakshmi

8.வித்யாலட்சுமி
கல்விக்கு அதிபதி. அறிவையும் கலைகளில் வல்லமையையும் தருபவள். வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.