அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம்: ஆனால்…!

 

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம்: ஆனால்…!

ஐயப்பன் கோயிலுக்குள் சென்று அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று  கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வரலாறு காணாத தீர்ப்பளித்தது.  

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று  கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வரலாறு காணாத தீர்ப்பளித்தது.  இதை பலரும் வரவேற்ற நிலையில் பலரும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்து மத அமைப்புகள், பாஜகவினரும் இந்த தீர்ப்புக்கு எதிராக  65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

sabari

இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையில்,  நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ எம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்ற இந்த அமர்வில் காலை சரியாக 10.30 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

sc

அதில், ‘பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது பல்வேறு கோயில்கள் மற்றும் மசூதியிலும்  உள்ளது. அனைத்து  மதத்தினரும் மதநம்பிக்கை கடைப்பிடிக்க உரிமை உள்ளது. உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள்  இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற  பரிந்துரை செய்ததால், இந்த வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நடந்து முடியும் வரை அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என்ற நிலை தொடரும்’ என்று கூறப்பட்டுள்ளது.