அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வாசிம் ஜாபர் ஒய்வு அறிவிப்பு

 

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வாசிம் ஜாபர் ஒய்வு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக 2000-ஆம் ஆண்டு தென் ஆப்பிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வாசிம் ஜாபர் (42) சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 2006-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 212 ரன்களை குவித்து அசத்தினார். இதுவே சர்வதேச டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

ttn

வாசிம் ஜாபர் 2000 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 இரட்டை சதங்கள் உள்பட 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் விளாசி மொத்தம் 1,944 ரன்கள் அடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால் இந்திய அணியில் அவர் அதிகம் தேர்வு செய்யப்படவில்லை. 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் வாசிம் ஜாபர் விளையாடி வந்தார். தற்போது  42 வயது நிரம்பிய வாசிம் ஜாபர், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.