அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் : சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

 

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000  வழங்கப்படும் : சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் நிலவுவதால், நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை  விடுத்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் நிலவுவதால், நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை  விடுத்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு உதவித்தொகைகளை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

ttn

அதன் படி,  ரூ.3,250 கோடி நிதியில் தமிழக மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது என்றும் தமிழகம் முழுவதும் பொது சமையல் கூடங்கள்அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, டோக்கன் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண தொகையாக ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 வழங்கபடும் என்றும் ஓட்டுநர், கட்டிட தொழிலாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

ttn

மேலும், ஆதரவற்றவர்களுக்கு உணவு வீடு தேடி சென்று வழங்கப்படும் என்றும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்றும் விலையில்லா அரசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.